அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
இதன்படி மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அரினா சபலென்கா மற்றும் மேடிசன் கீஸ் ஆகியோர் மோதினர்.
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த குறித்த போட்டியில் 3-6, 6-2, 5-7 என்ற செட் கணக்கில் மேடிசன் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.
குறித்த வெற்றியின் மூலம் தனது முதலாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை மேடிசன் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.