இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறுகின்றது.
ராஜ்கோட்டில் இடம்பெறும் குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
அத்துடன் முன்னதாக இடம்பெற்ற 2 இருபதுக்கு 20 போட்டிகளிலும் இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று களத்தடுப்பை தெரிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.