அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள், பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இந்த தொலைபேசி உரையாடல் குறித்து விவரித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி, ‘சட்டவிரோதமாக குடியேறியவர்கள் விடயத்தில் சரியானவற்றை இந்தியா மேற்கொள்ளும்” என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் இந்தியப் பிரதமர் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர் இந்திய பிரதமருடன் இடம்பெறும் முதலாவது உரையாடல் இதுவாகும்.
ஆய்வு நிறுவனமொன்றின் தரவுகளுக்கு அமைய 2024ஆம் ஆண்டு வரை உரிய ஆவணமின்றி குடியேறிய 7 லட்சத்து 25 ஆயிரம் இந்தியர்கள் அமெரிக்காவில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.