Thursday, May 29, 2025
HomeMain NewsAmericaடிரம்பிற்கு எதிராக குற்றவியல் வழக்குகளில் பணியாற்றிய இரு சட்டத்தரணிகள் பணிநீக்கம்

டிரம்பிற்கு எதிராக குற்றவியல் வழக்குகளில் பணியாற்றிய இரு சட்டத்தரணிகள் பணிநீக்கம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக இரண்டு குற்றவியல் வழக்குகளில் பணியாற்றிய சட்டத்தரணிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

டொனால்ட் ட்ரம்ப் மீது வழக்குத் தாக்கல் செய்வதில் குறித்த சட்டத்தரணிகள் குறிப்பிடத்தக்க பங்கு வகித்த நிலையில், அவர்கள் ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலைச் செயற்படுத்துவதில் நம்பிக்கையீனம் காணப்படுவதாக அமெரிக்க பதில் சட்டமா அதிபர் ஜேம்ஸ் மெக்கென்ரி தெரிவித்துள்ளார்.

பதில் சட்டமா அதிபரின் தீர்மானத்தை அடுத்துக் குறித்த சட்டத்தரணிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இரகசிய ஆவணங்களைத் தவறாகக் கையாண்டமை மற்றும் 2020 ஆம் ஆண்டு தேர்தல் தோல்வியை மாற்றுவதற்கு முயற்சித்தமை ஆகிய இரு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு டொனால்ட் டிரம்ப் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த இரண்டு குற்றவியல் வழக்குகளில் பணியாற்றிய சட்டத்தரணிகளே உடன் அமுலாகும் வகையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments