Saturday, May 24, 2025
HomeMain NewsUKஅமெரிக்கா சென்று இளவரசர் ஹரியை சந்திக்க இளவரசி கேட் திட்டம்

அமெரிக்கா சென்று இளவரசர் ஹரியை சந்திக்க இளவரசி கேட் திட்டம்

பிரித்தானிய இளவரசர்கள் வில்லியம், ஹரியை இணைப்பதற்காக வில்லியமுடைய மனைவியான இளவரசி கேட் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளவரசர் ஹரியை சந்திக்க இளவரசி கேட் திட்டம்
ஒரு காலத்தில் இணைபிரியாத மூவர் என பெயர் எடுத்தவர்கள், இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேட் மற்றும் இளவரசர் ஹரி ஆகியோர்.

அந்த அளவுக்கு எங்கு சென்றாலும் இணைபிரியாத அவர்களுடைய நட்பு, மேகன் என்னும் அமெரிக்கப் பெண்ணை ஹரி திருமணம் செய்ததால் முறிந்தது.

பிரித்தானிய ராஜ குடும்பத்தை விட்டு மட்டுமின்றி, பிரித்தானியாவை விட்டும் வெளியேறி, தன் மனைவியுடன் அமெரிக்காவிலேயே குடியமர்ந்தார் இளவரசர் ஹரி.

அதன் பின் சகோதரர்களுக்கிடையே ஏற்பட்ட பிளவு பெரிதாகிக்கொண்டே சென்றதேயொழிய, அவர்கள் உறவில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

இந்நிலையில், பிரிந்த சகோதரர்களை இணைக்க முடிவு செய்துள்ளாராம் இளவரசி கேட்.

2025ஆம் ஆண்டின் தனது முக்கிய இலக்குகளில் ஒன்றாக, தனது கணவரையும் அவரது தம்பியையும் இணைப்பது என முடிவு செய்துள்ளாராம் இளவரசி கேட்.

அதற்காக, அமெரிக்கா சென்று ஹரியை சந்திக்கவும் திட்டமிட்டுவருகிறாராம் இளவரசி கேட்.

அதாவது, இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் நடத்தும் The Royal Foundation என்னும் தங்கள் திண்டு நிறுவனத்தை அமெரிக்காவிலும் விரிவாக்கம் செய்ய தம்பதியர் திட்டமிட்டுவருகிறார்கள்.

அதற்காக அவ்வப்போது வில்லியமும் கேட்டும் அமெரிக்கா செல்லவேண்டியுள்ளது.

ஆக, அந்த பணிகளுக்காக அமெரிக்கா செல்லும்போது இளவரசி கேட், ஹரியை சந்தித்துப் பேசுவது என முடிவு செய்துள்ளார் என அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments