ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் பைக் இந்தியாவில் விரைவில் சந்தைக்கு வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் புது யுக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிப்பதில் பெயர் பெற்றது. EV நிறுவனம் இப்போது மின்சார மோட்டார் சைக்கிள் பிரிவில் நுழைவதற்கு தயாராகி வருகிறது.
இது சமீபத்தில் ரோட்ஸ்டர் வரம்பில் (roadster range) இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் கான்செப்ட்களை காட்சிப்படுத்தியது.
இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமான 2025 Honda Activa 110.., விலை மற்றும் முக்கியமான சிறப்பம்சம்
இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமான 2025 Honda Activa 110.., விலை மற்றும் முக்கியமான சிறப்பம்சம்
இந்நிலையில் ஓலா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் ஆரோஹெட் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக்கின் (Arrowhead electric sports bike) புகைப்படத்தை ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதம் ஆரோஹெட் ஸ்போர்ட்ஸ் பைக் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓலா ஆரோஹெட் ஸ்போர்ட்ஸ் பைக்கானது, செயல்திறன் மற்றும் ஸ்டைலை விரும்புவோரை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது Gen-3 இயங்குதளத்தின் கீழ் இருக்கும்.
எதிர்கால ஓலா தயாரிப்புகளுக்கும் இதுவே அடித்தளமாக அமையும். ஆரோஹெட் மோட்டார்சைக்கிளில் MoveOS 5 இடம்பெறும்.
இது Ola Maps மூலம் இயக்கப்படுவது போன்ற அம்சங்கள் மற்றும் செயல்பாடுகளுடன் வரும். அதோடு, Smart Charging, Smart Park, DBMS Alerts and Voice Assistant மற்றும் Predictive Intelligence ஆகியவையும் வழங்கப்படும். இது, Kabira Scooters KM 3000 போன்றவற்றுடன் போட்டியிடும்.
Ola Arrowhead Electric Sports bike-ன் விலை இந்தியாவில் 1.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இருக்கலாம். ஆன்ரோடு விலை 20,000 வரை அதிகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.