Tuesday, May 13, 2025
HomeMain NewsUKலண்டன் விபத்தில் இலங்கை தமிழர் உயிரிழப்பு

லண்டன் விபத்தில் இலங்கை தமிழர் உயிரிழப்பு

லண்டன் நோத்ஹால்ட்டில் (NORTHOLT) பகுதியில் இடம்பெற்றா விபத்தில் 47 வயதான இலங்கை தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காரை வேகமாக ஓட்டிச் சென்றவேளை ரைசிலிப (Ruislip Road) வீதியில் வைத்து பொலிசார் மறிக்க முற்பட்டவேளை காரில் இருந்தவர்களை காரை நிறுத்தாமல் படுவேகமாக சென்றதாக கூறப்படுகின்றது.

துரத்திச்சென்ற பொலிஸார்

பொலிஸார் காரை துரத்திச்சென்ற நிலையில் கார் எதிரே வந்த கார் மீது(FORD FOCUS) மோதி விபத்துள்ளானதாக கூறப்படுகின்றது.

காரில் பயணித்த 4 இளைஞர்களில், பின் சீட்டில் இருந்த 2 இளைஞர்கள் காரை விட்டு இறங்கி ஓடித் தப்பிவிட்டதாகவும் முன்னால் அமர்ந்திருந்த இளைஞர் மற்றும் காரை ஓட்டிய சாரதியை மட்டுமே பொலிசார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

கைதானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், காரில் சென்ற இலங்கைதமிழர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments