அமெரிக்க பயணிகள் விமானம் ஒன்று உலங்கு வானூர்தி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் இதுவரை 30 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் இருந்து 64 பேருடன் பயணித்த குறித்த விமானம் அந்த நாட்டு இராணுவ உலங்கு வானூர்தி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதனையடுத்து குறித்த விமானம் மற்றும் உலங்கு வானூர்தி என்பன பொட்டோமெக் ஆற்றில் வீழ்ந்துள்ளன.
இந்த சம்பவம் இன்று காலை அமெரிக்காவின் ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் விமானத்தை தரையிரக்க முற்பட்டபோது இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகிறது.
விபத்துக்குள்ளான விமானத்தில் 60 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் பயணித்ததுடன் உலங்கு வானூர்தியில் 3 இராணுவ உத்தியோகத்தர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.