டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுக போட்டியில் அதிவேக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜொஷ் இங்கிலிஷ் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
சுற்றுலா அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று ஆரம்பமானது.
குறித்த போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 654 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பில் உஸ்மன் கவாஜா 232 ஓட்டங்களையும், ஸ்டீவன் ஸ்மித் 141 ஓட்டங்களையும், ஜொஷ் இங்கிலிஷ் 94 பந்துகளில் 102 ஓட்டங்களைப் பெற்றார்.
அதற்கமைய, டெஸ்ட் போட்டிகளில் அறிமுக போட்டியொன்றில் குறைந்த பந்துகளில் சதமடித்த வீரர்கள் பட்டியலில் ஜொஷ் இங்கிலிஷ் இரண்டாவது இடத்தில் உள்ளார்.