Thursday, March 6, 2025
HomeMain Newsகுறைந்த ஓட்டங்களுக்குள் சுருண்ட இலங்கை அணி

குறைந்த ஓட்டங்களுக்குள் சுருண்ட இலங்கை அணி

சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் 4ஆவது நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகிறது.

போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 165 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இலங்கை அணி சார்பில் Dinesh Chandimal அதிகபட்சமாக 72 ஓட்டங்களை பெற்ற நிலையில், ஏனைய அனைத்து வீரர்களும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் Matthew Kuhnemann 05 விக்கெட்டுக்களையும், Nathan Lyon 03 விக்கெட்டுக்களையும், Mitchell Starc 02 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 654 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.

இதன்படி இலங்கை அணி தற்போது பலோவன் முறைப்படி தமது இரண்டாவது  இன்னிங்ஸில் துடுப்பாடி வருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments