Thursday, March 6, 2025
HomeMain NewsUKவிசா விதிகளில் மாற்றம்... இனி இவர்கள் தங்கள் பிள்ளைகளை பிரித்தானியாவுக்கு அழைத்துவரலாம்

விசா விதிகளில் மாற்றம்… இனி இவர்கள் தங்கள் பிள்ளைகளை பிரித்தானியாவுக்கு அழைத்துவரலாம்

பிரித்தானியாவில், உக்ரைனியர்களுக்கு வழங்கப்படும் விசா தொடர்பிலான விதிகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களையடுத்து, அவர்கள் இனி தங்கள் பிள்ளைகளை பிரித்தானியாவுக்கு அழைத்துவரலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உக்ரைனை ரஷ்யா ஊடுருவியதைத் தொடர்ந்து, உக்ரைனியர்களுக்காக Homes for Ukraine scheme என்னும் திட்டத்தை பிரித்தானிய அரசு துவங்கியது.

ஆனால், கடந்த ஆண்டு, பிப்ரவரி மாதம், அந்த திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்தது முந்தைய கன்சர்வேட்டிவ் அரசு.

அதன்படி, ஏற்கனவே பிரித்தானியாவுக்கு வந்துள்ள உக்ரைனியர்கள், தங்கள் குடும்பத்தினர் பிரித்தானியாவுக்கு வருவதற்கு ஸ்பான்சர் செய்யமுடியாது, பிரித்தானியர்கள் மட்டுமே ஸ்பான்சர் செய்யமுடியும் என அறிவிப்பு வெளியானது.

போருக்குத் தப்பி பிரித்தானியா வந்த 190,000 பேரில் பலர், தங்கள் குடும்பங்களையும், குறிப்பாக தங்கள் பிள்ளைகளை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்வதற்கான முயற்சிகளைத் துவங்கியிருந்த நிலையில், இந்த அறிவிப்பு அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இனி இவர்கள் தங்கள் பிள்ளைகளையும் அழைத்துவரலாம்
இந்நிலையில், தற்போதைய லேபர் அரசு, Homes for Ukraine scheme விதிகளில் மாற்றம் செய்து, முன்போலவே, பிரித்தானியாவிலிருக்கும் உக்ரைனியர்கள் தங்கள் பிள்ளைகளை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

தங்கள் பிள்ளைகளைப் பிரிந்து பல மாதங்களாக வாடியிருந்த பல பெற்றோருக்கு இந்த அறிவிப்பு பெரும் ஆறுதலையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தொண்டு நிறுவனங்கள் பல, இந்த மாற்றத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளன.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments