Wednesday, May 28, 2025
HomeMain NewsUKஇந்தியா சென்றுள்ள பிரித்தானிய இளவரசர்!

இந்தியா சென்றுள்ள பிரித்தானிய இளவரசர்!

பிரித்தானிய இளவரசர் எட்வர்ட் (Edward) இந்தியாவிற்கான மூன்று நாள் பயணத்தின் ஒரு பகுதியாக மும்பைக்கு சென்றுள்ளார்.

இந்த பயணம் பிரித்தானியா மற்றும் இந்தியாவின் நீண்டகால உறவை கொண்டாடுவதற்கும், இளைஞர்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் அமைந்துள்ளது என்று பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

இளவரசர் எட்வர்ட் 2023 மார்ச் மாதம் எடின்பரோ இளவரசராக பட்டம் பெற்ற பிறகு, இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ ராஜகுடும்ப உறுப்பினராக சென்றுள்ளார்.

இதற்கு முன்பு 2019-ஆம் ஆண்டு அப்போதைய வேல்ஸ் இளவரசர் சார்ல்ஸ் இந்தியாவிற்கு சென்றிருந்தார்.

இளவரசர் எட்வர்டின் பயண திட்டம்

– மும்பை மற்றும் டெல்லியில் இளைஞர்களை சந்தித்து Duke of Edinburgh’s International Award திட்டத்தை ஊக்குவிக்கிறார்.

– இந்த விருது 1956ல் அவரது தந்தை இளவரசர் பிலிப் தொடங்கியது, இது இளைஞர்களின் திறமைகளை மேம்படுத்த உதவுகிறது.

– இந்த விருது இந்தியாவில் International Award for Young People (IAYP) என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

– 1962 முதல் 150,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதன் பயனாளர்களாக இருக்கின்றனர்.

– இந்திய கல்வி, வணிக தலைவர்களுடன் கலந்துரையாடல்களில் பங்கேற்பதுடன், விளையாட்டு மற்றும் கலை துறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவார்.

அரசியல் மற்றும் சமூக முக்கியத்துவம்

இந்தப் பயணம் பிரித்தானியா மற்றும் இந்தியாவின் உறவுகளை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.

பிரித்தானிய High Commissioner லிண்டி காமெரான், இளவரசர் எட்வர்டின் வருகை இந்தியா-பிரிட்டன் உறவின் உறுதியை வலுப்படுத்தும் முக்கியமான சந்தர்ப்பம் என்று தெரிவித்தார்.

இந்தியாவில் தன் பணிகளை முடித்த பிறகு, இளவரசர் எட்வர்ட் நேபாளத்திற்குப் பயணம் செய்து, அவரது மனைவி சோஃபி, எடின்பரோ மகாராணியுடன் இணையவுள்ளார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments