பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் முதியோர் காப்பகம் செயல்படுகிறது.
அங்கு 75-க்கும் மேற்பட்ட முதியவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த காப்பகத்தில் உள்ள சலவை அறையில் திடீரென தீப்பிடித்தது.
பின்னர் மளமளவென மற்ற பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.
இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்தனர்.
அவர்களின் சில மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
ஆனால் அதற்குள் தீயில் கருகி 3 முதியவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த 9 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.