இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நேற்றுடன் முடிவடைந்துள்ளது.
இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியும் 3-வது போட்டியில் இங்கிலாந்து அணியும் 4, 5-வது போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது.
இதனையடுத்து ஒருநாள் தொடர் வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது.
இந்த தொடருக்கான முதல் போட்டி நாக்பூரில் நடைபெறுகிறது.
இதற்காக இந்தியா, இங்கிலாந்து அணி வீரர்கள் நாக்பூர் வந்தடைந்தனர்.
இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால், சுப்மன் ஆகியோர் நாக்பூர் விமான நிலையம் வந்தடைந்தனர்.
அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.