Friday, April 11, 2025
HomeGossipsசீமானுக்கு சாபம் விட்ட விஜயலக்ஷ்மி!

சீமானுக்கு சாபம் விட்ட விஜயலக்ஷ்மி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சாபம் விட்டு நடிகை விஜயலக்ஷ்மி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பெரியாருக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெரியார் குறித்த சீமானின் பேச்சு சர்ச்சையான நிலையில், சமீபத்தில் பேசிய சீமான், பெரியார் என்னென்ன பேசியிருக்கிறார், மக்களுக்கான என்னென்ன செய்தார் என்பதை நல்ல தாய், தந்தைக்கு பிறந்தவர்கள் வந்து என்னிடம் கூறுங்கள் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக வீடியோவில் பேசியுள்ள நடிகை விஜயலட்சுமி, தமிர்நாட்டில் அனைவரும் நல்ல தாய், தந்தைக்கு பிறந்தவர்கள்தான், பெரியாரிஸ்ட்டுகள் வந்து உங்களுக்கு பதில் சொல்வார்கள் என்று கூறியுள்ளார்.

இது மட்டுமல்லாமல், திமுகவினர் முன்னாள் தன்னை அசிங்கப்படுத்த வேண்டாம் என்று கூறி, கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை சீமான் தனக்கு மாதாமாதம் வங்கிக் கணக்கில் ரூ.50,000 செலுத்தியதாகவும், அதன் பின் தன்னை மிகவும் டார்ச்சர் செய்ததாகவும் கூறியுள்ளார்.

சீமானின் டார்ச்சர் தாங்காமல் புகார் அளித்த தன்னை, திமுகவினருடன் சேர்ந்துகொண்டு இவ்வாறு செய்வதாக கூறி கேவலப்படுத்தியதாவும் ஆவேசமாக கூறியுள்ளார். சீமான், நல்ல தாய், தந்தைக்கு பிறந்திருந்தால், ஈரோடு பிரசார மேடையிலேயே இதற்கு பதில் சொல்ல வேண்டும் எனவும் விஜயலட்சுமி கூறியுள்ளார்.

மேலும், கண்டிப்பாக ஒருநாள் நான் ஜெயிப்பேன் என்று கூறியுள்ள சீமான், என்னதான் தொண்டை கிழிய கத்தினாலும், இந்த ஜென்மத்தில் ஜெயிக்க மாட்டார், தன்னுடைய சாபம் ஜெயிக்க விடாது என்றும் கூறி விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments