சுவீடனின் மத்திய பகுதியிலுள்ள கல்வி நிலையமொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் துப்பாக்கி சூட்டை நடத்திய நபரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
‘சுவீடன் வரலாற்றில் மிகவும் மோசமான துப்பாக்கிச் சூடு” இதுவென அந்த நாட்டு பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக இந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறையினர் அறிவித்திருந்தனர்.
இந்தநிலையிலேயே துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான 10 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.