கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் இடம்பெற்ற படகு விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
56 வயதான நபர் ஒருவர் இந்த படகு விபத்தில் சிக்கியதாகவும் அவரை மீட்டதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பனிப் புயல் காரணமாக படகு விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
வாங்குவார் தீவுகளின் தென்பகுதியில் இந்த படகு விபத்து இடம் பெற்றுள்ளது.
கடுமையான பனிப்பொழிவு மற்றும் பனிப்புயல் நிலைமைகளினால் குறித்த படகினை செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சிக்கிய பயணிகளை மீட்பதற்கு உறங்குவானூர்தி பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது சம்பவத்தில் உயிரிழந்த பெண் தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.