கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள கிரிஷ் கட்டடத்தில் நேற்று இரவும் தீப்பரவல் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிரிஷ் கட்டடத்தின் 24ஆவது மாடியில் நேற்று இரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு மாநகரசபைக்குச் சொந்தமான 05 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
முன்னதாக, நேற்று முன்தினம் கிரிஷ் கட்டடத்தின் 33ஆவது மாடியில் தீப்பரவல் ஏற்பட்டிருந்தது.
இந்த தீப்பரவலினால் அங்கு காணப்பட்ட மரத்திலான பொருட்களும் தீக்கிரையானதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.