அர்ஜென்டினாவின் தலைநகரான பியூனஸ் அயர்ஸின் புறநகர் பகுதியில் உள்ள ஆறு ஒன்று திடீரென பிரகாசமான சிவப்பு நிறமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஆற்றின் அருகில் இயங்கும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் இரசாயன கழிவுகள் காரணமாக, இவ்வாறு நிறம் மாற்றமடைந்திருக்கலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனவே, நிற மாற்றத்திற்கான காரணத்தை அறிவதற்காக அந்நாட்டு சுற்றுலாத்துறை அதிகாரிகள் ஆற்றின் நீர் மாதிரிகளை பரிசோதனை செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.