பிரித்தானியாவின் பல பகுதிகள் 450 மைல் நீள பனிச்சுவரின் தாக்கத்தில் சிக்கும் அபாயத்தில் உள்ளது.
பிரித்தானியாவில் 37 நகரங்கள் 450 மைல் அளவிலான பனிச்சுவர் (450-mile wall of snow) தாக்கத்தால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகும் என புதிய வானிலை அறிக்கைகள் எச்சரிக்கின்றன.
இந்த 37 முக்கிய நகரங்கள் பனிமழையால் மூடப்படும் நிலையில் உள்ளன.
இந்த கடும்பனி எந்தெந்த பகுதிகளை தாக்கும்?
இங்கிலாந்து – பிரிமிங்ஹாம், பிராட்போர்ட், லீட்ஸ் உள்ளிட்ட 24 நகரங்கள்
ஸ்காட்லாந்து – அபர்டீன், எடின்பரோ, இன்பர்நெஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள்
வடக்கு அயர்லாந்து – ஆர்மாக், பெல்பாஸ்ட், லண்டன்டெர்ரி உள்ளிட்ட பகுதிகள்
ஸ்காட்லாந்தின் மையப்பகுதிகளில் வெப்பநிலை 0°C ஆக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
வடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தின் பிற பகுதிகளில் 2°C முதல் 4°C வரை இருக்கும் என கூறப்படுகிறது.
கடுமையான குளிர்ச்சியால் பனிமழை ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.