Friday, May 2, 2025
HomeMain NewsTechnologyலேண்ட் லைன் போன்களில் வரும் பெரிய மாற்றம்?..

லேண்ட் லைன் போன்களில் வரும் பெரிய மாற்றம்?..

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், லேண்ட் லைன் டெலிபோன்களில் STD CODE பயன்பாட்டை நிறுத்த அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

அதற்கு பதிலாக செல்போன்களை போலவே 10 டிஜிட் எண் அமைப்பை லேண்ட் லைனிலும் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய SDCA- அடிப்படையிலான (STD எண் அடிப்படையிலான) எண் திட்டத்திலிருந்து LSA (உரிமம் பெற்ற சேவை பகுதி) அடிப்படையிலான 10-டிஜிட் CLOSED எண் திட்டத்திற்கு மாறும் டிராய்-இன் இந்த பரிந்துரை பரிசீலனையில் உள்ளது.

இந்த முறை மூலம் லோக்கல் கால் உட்பட முதலில் ‘0’ என்ற எண், அடுத்து SDCA குறியீடு எண், மூன்றாவதாக சந்தாதாரர் எண் ஆகியவற்றை முறையே உள்ளீடு செய்து போன் செய்ய வேண்டும்

ஒரு தொலைத்தொடர்பு வட்டம் அல்லது உரிமம் பெற்ற சேவைப் பகுதி (LSA) பொதுவாக மாநில அளவிலான பகுதி அல்லது பெரிய பெருநகரப் பகுதியைக் குறிக்கிறது. LSA- அடிப்படையிலான 10 டிஜிட் எண் முறை இடையூறு மற்றும் தாமதத்தை குறைத்து நீண்டகால சேவையை வழங்க உதவும் என்று டிராய் தெரிவித்துள்ளது.

சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும் தற்போதைய தொலைபேசி எண்களில் எந்த மாற்றமும் இருக்காது. மேலும், இந்த திட்டத்தை செயல்படுத்த தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கு ஆறு மாதங்கள் வரை அவகாசம் அளிக்கப்படும்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments