உக்ரைனிய படைகள் Centralna சுரங்கத்தில் தங்கள் நாட்டின் தேசிய கொடியை ஏற்றியுள்ளனர்.
உக்ரைன் கொடிய ஏற்றிய படைகள்
உக்ரைன் படைகள் டொரெட்ஸ்கில்(Toretsk) உள்ள “சென்ட்ரல்னா”(Centralna) சுரங்கத்தின் மீது தங்கள் தேசியக் கொடியை ஏற்றியுள்ளன.
150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட இந்தச் சுரங்கம், டான்பாஸ் பிராந்தியத்திற்கும், உக்ரைனின் சுரங்கத் தொழில் பாரம்பரியத்திற்கும் ஒரு அடையாளமாக விளங்குகிறது.
ரஷ்யப் படைகள் நகரில் தங்கள் கொடிகளை நட்டு ஒரு பிரச்சார நாடகத்தை அரங்கேற்ற முயன்ற ஒரு நாளுக்குப் பின் இந்த சவாலான செயல் வெளிவந்துள்ளது.
ரஷ்ய படைகள் முயற்சி
இதற்கு முன்னதாக பிப்ரவரி 9-ஆம் திகதி டொனெட்ஸ்க், டோரேட்ஸ்கில் ரஷ்ய கொடியை நட முயன்ற ரஷ்யாவின் முயற்சிகள் உக்ரைன் படைகளால் உடனடியாக முறியடிக்கப்பட்டது.
அதிகாலையில், ரஷ்ய வீரர் ஒருவர் ரஷ்ய கொடியை ஏற்றும் முயற்சியில் ஒரு சுரங்க shaft கோபுரத்தில் ஏறினார்.
இதனை முறியடிக்க Predator Brigade பிரிவு ட்ரோன் தாக்குதலை தொடங்கியது, அத்துடன் 28வது Mechanized Brigade-யும் தாக்குதலை தொடங்கியது.
இறுதியில், உக்ரைன் பாதுகாவலர்கள் விரைவாக இந்த முயற்சியை முறியடித்து, ரஷ்ய கொடிகள் மற்றும் அவற்றை நட முயன்றவர்களை அழித்தது.