டுபாயில் நடைபெறும் உலக அரசுகளுக்கு இடையிலான உச்சி மாநாட்டில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று பிற்பகல் உரையாற்றவுள்ளார்.
எதிர்கால அரசாங்கங்களை வடிவமைத்தல் என்ற கருப்பொருளின் கீழ் இந்த ஆண்டு நடைபெறும் மாநாட்டின் போது, ஜனாதிபதி பல மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு சந்திப்புகளில் பங்கேற்றுள்ளார்.
அத்துடன் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நேற்றைய தினம் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மற்றும் பிரித்தானிய முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.