நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை விரைவாக மீண்டும் தேசிய மின் கட்டமைப்பில் இணைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை அல்லது அதற்கு முன்னர் ஒரு மின்பிறப்பாக்கியை மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பதன் மூலம் தடையில்லாத மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, குறித்த மின்பிறப்பாக்கிகள் தேசிய மின் கட்டமைப்புடன் மீண்டும் இணைக்கப்படும் வரை நாட்டில் தினமும் மின் துண்டிப்பை அமுலாக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.