Tuesday, April 8, 2025
HomeHoroscopeநெருக்கமானவர்கள் இறந்தால் அழுவது சரியா....!

நெருக்கமானவர்கள் இறந்தால் அழுவது சரியா….!

மனிதன் வாழ்வு நிலையற்றது என்று தெரிந்தும் அவனால் பாச பிணைப்புகளில் இருந்து வெளியில் வர முடியவில்லை. ஏன் நம் உடலே நமக்கு சொந்தம் இல்லை என்று தெரிந்தும் அவனால் எதையும் கடந்து போக முடிவதில்லை.

அப்படியாக மஹாபாரதத்தில் அனைவராலும் போற்றப்பட்ட அர்ஜுனனின் மகன் அபிமன்யு அர்ஜுனன் கண் முன்னே இறப்பதை பார்த்து தாங்கி கொள்ள முடியாமல் கதறி அழுதான். அதை பார்த்து கொண்டு இருந்த கண்ணனும் அழ தொடங்கினார்.

கண்ணன் அழுவதை பார்த்த அர்ஜுனன் , கண்ணனை இறுக பற்றி கொண்டு கண்ணா..!! அபிமன்யு உனக்கு மருமகன் அல்லவா அதனால் தான் நீயும் துக்கம் தாள முடியாமல் அழுகிறாயோ ? என்று கேட்டான். அதற்கு கண்ணன் அர்ஜுனா நான் துக்கம் தாளாமல் அளவில்லை.உனக்கு நான் கீதையை உபதேசம் செய்ததற்காக வெட்கம் தாளாமல் அழுகிறேன் என்றான் கண்ணன்.

அதற்கு அர்ஜுனன் கண்ணனை பார்த்து,

கண்ணா!!நீ உலகை படைத்த கடவுள், உறவு பற்று, பாசம், பந்தம் எதுவும் கிடையாது. ஆனால் நானோ மனித பிறவி என்னால் எப்படி கிருஷ்ணா இதை எளிதாக கடக்க முடியும் என்றான். கண்ணன்,அர்ஜுனா இந்த உறவு பற்று பாசம் எல்லாம் ஒருவர் உடலில் உயிர் இருக்கும் வரை தான் என்றார்.

அவனை தடுத்த அபிமன்யு ஐயா தாங்கள் யார்?என் போன்ற ஆன்மாவுக்கு உறவு ஏதும் கிடையாது என்று விலகி சென்றான். அதை கேட்டு அதிர்ச்சியாக நின்ற அர்ஜுனனிடம்,கிருஷ்ணர் பார்த்தாயா அர்ஜுனா உறவு, பந்தம் பாசம் எல்லாம் ஒரு உடலில் உயிர் உள்ள வரை தான். உடலை விட்டு உயிர் பிரிய உடலுக்கும்,உயிர்க்கும் உணர்வில்லாமல் போயிவிடும்.

ஆக,நீ அழ வேண்டும் என்றால் அதோ பூவுலகில் போர்க்களத்தில் உன் மகன் அபிமன்யுவின் உடல் கட்டை இருக்கிறதே அதை கட்டி பிடித்து அழு. உன் உணர்ச்சிகளை அந்த உடலில் கொட்டி தீர்த்து விடு. ஒன்றை நன்றாக புரிந்து கொள் அர்ஜுனா ஒரு உயிர் பிறப்பிற்கும் அதன் இறப்பிற்கும் ஒருபொழுதும் யாரும் பொறுப்பாக மாட்டார்கள்.

ஆக்கம் அவனுடையது அழிவும் அவனுடையது.நாம் அவன் ஆட்டி வைக்கும் பொம்மைகள்.உன்னுடைய கடமையை நீதி தவறாமல் செய், இயற்கை அதனுடைய கடமைகளை பார்த்து கொள்ளும் என்றார் கண்ணன்.

அர்ஜுனன், கண்ணா ஒருபொழுதும் அப்படி சொல்லாதே என்கிறார். கண்ணன் அர்ஜுனனை தெளிவு படுத்த,சரி அர்ஜுனா என்னுடன் வா சொர்க்கலோகம் செல்வோம்.அங்கு இறந்த உன் மகன் அபிமன்யு இருப்பான். அவனை பார்க்கலாம் என்று அழைத்து செல்கிறார். சொர்க்கலோகம் சென்ற அர்ஜுனன் அவனுடைய மகன் அபிமன்யு பார்த்து அடையாளம் கண்டு கொண்டு,மகனே என்று அவனை கட்டி அணைக்க அருகில் செல்கின்றான்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments