Tuesday, April 15, 2025
HomeHealthபச்சை மிளகாயும் நீரிழிவு நோயும்...!

பச்சை மிளகாயும் நீரிழிவு நோயும்…!

இன்றைய காலகட்டத்தில், ஒழுங்கற்ற வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப் பழக்க வழக்கங்களால், நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதுபோன்ற சூழ்நிலையில், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் உணவுகளை மக்கள் தங்கள் உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாய் போன்ற சிறிய காரமான காய்கறி நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மைகளை வழங்குகின்றது.

பொதுவாக மக்கள் பச்சை மிளகாயை அதன் சுவைக்காகவும், காரத்திற்காகவும் உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள்.

இது சுவைக்காக மட்டுமல்லாமல் நீரழிவு நோய்க்கும் பல நிவாரணம் தருகின்றது. ஆனால் பச்ச மிளகாய் சாப்பிடுவது தீமைகளும் உண்டாக்கும். இதை விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

பச்சை மிளகாய் நீரிழிவு நோய்க்கு நல்லதா..?

நிபுணர்களின் கருத்துப்படி பச்ச மிளகாயை உணவின் சுவையை அதிகரிக்க மக்கள் பயன்படுத்துகிறார்கள். பச்சை மிளகாயில் வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் உள்ளன, அவைஉடலின் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது.

இதிலிருக்கும் கிளைசெமிக் மிகக் குறைவாக இருப்பதால் சர்க்கரையை விரைவாக அதிகரிக்காது என்று உணவியல் நிபுணர் கூறுகிறார்.

இது தவிர, இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் சர்க்கரையை மெதுவாக உறிஞ்சும். பச்சை மிளகாயில் காணப்படும் சேர்மங்கள் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும். இதன் மூலம் இரத்த சக்கரை அளவு கணிசமாக குறையும்.

நீரிழிவு நோய்க்கு பச்சை மிளகாய் நன்மைகள்..

பச்சை மிளகாயில் அதிக நார்ச்சத்து உள்ளது, எனவே அவை இரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்க உதவும். இது இன்சுலின் செயல்திறனையும் மேம்படுத்தும்.

நீரிழிவு நோயாளிகள் தங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம். பச்சை மிளகாய் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது மற்றும் கொழுப்பை எரிக்க உதவுகிறது, இதன் மூலம் எடை கட்டுப்பாட்டில் உதவுகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகம். பச்சை மிளகாயில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற சேர்மங்கள்கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவும்.

பச்சை மிளகாயில் வைட்டமின் சி மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் ஏராளமாகக் உள்ளன, அவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகின்றன.

நீரிழிவு நோய்க்கு பச்சை மிளகாய் தீமைகள்..

காரமான உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் வயிற்று எரிச்சல், அமிலத்தன்மை மற்றும் புண்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். நீரிழிவு நோயாளிகள் பச்சை மிளகாயை சீரான அளவில் உட்கொள்ள வேண்டும்.

இதனால் செரிமான பிரச்சினைகள் அதிகரிக்காது. பச்சை மிளகாயை அதிகமாக உட்கொள்வது சிலருக்கு இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். ஒரு நீரிழிவு நோயாளிக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால், அவர் அதிகமாக மிளகாய் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments