Wednesday, April 30, 2025
HomeMain NewsUKஇந்திய இளைஞர்களுக்கு பிரித்தானியா வழங்கும் சிறப்பு விசா

இந்திய இளைஞர்களுக்கு பிரித்தானியா வழங்கும் சிறப்பு விசா

சிறப்புத் திட்டம் ஒன்றின் கீழ் இந்திய இளைஞர்களுக்கு விசா வழங்கும் பிரித்தானியாவின் திட்டம் ஒன்று அடுத்த வாரம் துவங்க உள்ளது.

பிரித்தானியா வழங்கும் சிறப்பு விசா
பிரித்தானியாவின் The UK-India Young Professionals Scheme (YPS) 2025 என்னும் திட்டம், அடுத்த வாரம் துவங்க உள்ளது.

இந்திய இளைஞர்கள் பிரித்தானியாவிலும், பிரித்தானிய இளைஞர்கள் இந்தியாவிலும் இரண்டு ஆண்டுகள் வரை வாழவும், படிக்கவும், பயணிக்கவும், வேலை செய்யவும் இந்த சிறப்பு விசா அனுமதிக்கிறது.

மூன்று நாட்கள் மட்டுமே…
இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க மூன்று நாட்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளது. பிப்ரவரி 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த திட்டத்துக்கு விண்ணப்பிப்பவர்கள், 18 வயது முதல் 30 வயது வரையுள்ள இளைஞர்களாக இருக்கவேண்டும்.

அவர்கள் பிரித்தானிய இளங்கலை பட்டப்படிப்புக்கு இணையாக அல்லது அதற்கு அதிகம் படித்தவர்களாக இருக்கவேண்டும்.

அத்துடன், தங்கள் சொந்த செலவுகளை கவனித்துக்கொள்ளும் வகையில், பிரித்தானியாவில் குறைந்தபட்சம் 2,530 பவுண்டுகள் வங்கிக் கையிருப்பு வைத்துள்ளதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்கவேண்டும்.

மற்றபடி இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் கிடையாது.

3,000 இந்திய இளைஞர்களுக்கு The UK-India Young Professionals Scheme (YPS) 2025 திட்டத்தின் கீழ் விசா வழங்கப்பட உள்ளதாக இந்தியாவுக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகரான லிண்டி கேமரோன் (Lindy Cameron) தெரிவித்துள்ளார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments