சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 19-ம் திகதி தொடங்குகிறது.
இந்த தொடரில் மொத்தம் எட்டு அணிகள் மோதுகின்றன.
பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறும் இந்த தொடருக்காக ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் காயத்தால் அவதிப்பட்டு வரும் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் இடம்பெறுவது சந்தேகம் தான் என்று ஆஸ்திரேலிய அணி தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சொந்த காரணங்களுக்காக சாம்பியன்ஸ் கோப்பை அணியில் இருந்து விலகுவதாக மிட்செல் ஸ்டார்க் அறிவித்துள்ளது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் விலகியுள்ளதால் அனுபவம் இல்லாத பந்துவீச்சாளர்களுடன் சாம்பியன்ஸ் கோப்பையில் களமிறங்க வேண்டிய கட்டாயம் ஆஸ்திரேலிய அணிக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக பேட் கம்மின்ஸ் விலகியுள்ளதால் ஆஸ்திரேலிய அணியை ஸ்டீவ் ஸ்மித் வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைக்குள் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.