பங்களாதேஷ் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களின் போது 1,400 பேர் இறந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.
இந்தக் இறப்புக்கள் பல பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்டவை என்று சுட்டிக்காட்டும் ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள், பதவி நீக்கம் செய்யப்பட்ட சேக் ஹசீனா அரசாங்கம் நாட்டின் மக்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதற்கிடையில், பங்களாதேஷில் இடைக்கால அரசின் தலைவராக பணியாற்றி வரும் முகமது யூனுஸ், தலைநகர் டாக்காவில் உள்ள ஹசீனா நிர்வாகத்தின் பல சித்திரவதைக் கூடங்கள் மற்றும் ரகசிய சிறைச்சாலைகளுக்கு சென்று பார்வையிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.