நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெரும்பாலும் சீரான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிறைந்து காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிகாலை நேரங்களில் நாட்டின் பல பகுதிகளில் குளிரான வானிலை நிலவும் என்றும், நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.