நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின்சார விநியோகத் தடையை அமுல்படுத்துவது தொடர்பான தீர்மானம் இன்று காலை அறிவிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பான தீர்மானம் நேற்றைய தினம் அறிவிக்கப்படுமென முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், தற்போதைய மின்சார தேவையினை மேலும் ஆராய்ந்து இந்த விடயம் தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்படுமென இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, பௌர்ணமி தினமான நேற்றையதினம் சுழற்சி முறையிலான மின்சார விநியோகத்தடை அமுல்படுத்தப்படவில்லை.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திலுள்ள 3 மின்பிறப்பாக்கிகளும் செயலிழந்துள்ளன.
இந்தநிலையில், அவற்றைச் சீர் செய்து தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.