இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 142 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி 50 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 356 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக சுப்மன் கில் 112 ஓட்டங்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 78 ஓட்டங்களையும், விராட் கோலி 52 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக ஆடில் ரசித் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி 34.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 214 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
3 போட்டிகள் ஒருநாள் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.