Saturday, May 3, 2025
HomeMain NewsUKபிரித்தானியாவின் புதிய Parking விதிகள்: ஓட்டுநர்களுக்கு 5 நிமிடங்கள் அவகாசம்

பிரித்தானியாவின் புதிய Parking விதிகள்: ஓட்டுநர்களுக்கு 5 நிமிடங்கள் அவகாசம்

பிரித்தானியாவில் புதிய பார்க்கிங் விதிகள் (Parking Rules) வரும் பிப்ரவரி 17 முதல் அமுலுக்கு வருகிறது.

இதன் மூலம், தனியார் பார்க்கிங் பகுதிகளில் வாகன ஓட்டுநர்கள் கட்டணம் செலுத்துவதற்கு கூடுதல் 5 நிமிடங்கள் அவகாசம் வழங்கப்படும்.

இந்த மாற்றம், உடனடி கட்டண செயல்முறையில் சிக்காமல் இருக்க ஓட்டுநர்களுக்கு நியாயமான வாய்ப்பை வழங்கும் நோக்கில் செய்யப்பட்டதாக British Parking Association (BPA) தெரிவித்துள்ளது.

இந்த மாற்றத்தைக் கண்காணிக்க Private Parking Scrutiny and Advice Panel (PPSAP) பொறுப்பேற்கும்.

இந்த விதி, Automatic Number Plate Recognition (ANPR) மற்றும் CCTV கண்காணிப்பில் உள்ள தனியார் பார்க்கிங் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

ஆனால், Local Authority பார்கிங் பகுதிகள் மற்றும் CCTV கண்காணிப்பு இல்லாத தனியார் பார்கிங் இடங்களுக்கு இது பொருந்தாது.

BPA தலைமை அதிகாரி ஆண்ட்ரூ பெஸ்டர், “பார்கிங் நடைமுறைகள் அனைவருக்கும் நியாயமானதாக இருக்க வேண்டும், இந்த மாற்றம் அதற்கு ஒரு முக்கிய முன்னேற்றம்,” எனக் கூறினார்.

அதேபோல், International Parking Community (IPC) தலைமை செயல் அதிகாரி வில் ஹர்லி, ஓட்டுநர்கள் பார்கிங் அடையாளங்களை கவனமாக வாசிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments