Sunday, May 25, 2025
HomeSportsஎன்னை கிங் என அழைக்காதீர்கள்- பாபர் அசாம்

என்னை கிங் என அழைக்காதீர்கள்- பாபர் அசாம்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம்.

அவர் சமீப காலங்களாக பேட்டிங்கில் தடுமாறி வருகிறார். இதனால் ஒரு டெஸ்ட் தொடரில் அவர் அணியில் இடம் பெறவில்லை.

அதனை தொடர்ந்து பின்னர் மீண்டும் ஒருநாள் அணியில் இடம் பிடித்து விளையாடினார்.

ஒரு சில போட்டிகளில் மட்டுமே அரை சதம் கடந்தார்.

மற்ற போட்டிகளில் சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.

தற்போது முத்தரப்பு தொடரிலும் அவர் பெரிதாக ரன்களை குவிக்கவில்லை.

நியூசிலாந்துக்கு எதிராக 10 ரன்னிலும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 23 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் தன்னை கிங் என அழைக்காதீர்கள் எனவும் தான் இன்னும் அந்த இடத்திற்கு வரவில்லை எனவும் பாபர் அசாம் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

தயவுசெய்து என்னை கிங் என்று அழைப்பதை நிறுத்துங்கள். நான் கிங் இல்லை. நான் இன்னும் அந்த இடத்திற்கு வரவில்லை.

இப்போது எனக்கு புதிய ரோல் உள்ளன. நான் கடந்த காலத்தை மறந்து எதிர்காலத்தை பார்க்க வேண்டும்.

என பாபர் அசாம் கூறினார்.

பாபர் அசாம் கடைசியாக ஆகஸ்ட் 30, 2023 அன்று முல்தானில் நேபாளத்திற்கு எதிராக சர்வதேச சதம் (131 பந்துகளில் 151 ரன்கள்) விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments