சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடருக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
மார்ச் 9-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 2.24 மில்லியன் டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 19.45 கோடி வழங்கப்படும் என்று ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கான பரிசுத் தொகை 1.12 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 9.72 கோடி வழங்கப்படுகிறது.
அரையிறுதி சுற்றில் தோல்வியை தழுவும் ஒவ்வொரு அணிக்கும் 5.6 லட்சம் அமெரிக்க டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 4.86 கோடி வழங்கப்படுகிறது.
இதன் மூலம் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் மொத்த பரிசுத் தொகை 6.9 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 60 கோடி ஆகும்.
க்ரூப் சுற்று போட்டிகளில் ஒவ்வொரு அணியும் பெறும் வெற்றிக்கு (ஒரு போட்டி) 34 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 30 லட்சம் வழங்கப்படும்.
ஐந்து மற்றும் ஆறாவது இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு 3.5 லட்சம் டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 3 கோடி வழங்கப்படுகிறது.
ஏழு மற்றும் எட்டாவது இடம் பிடிக்கும் அணிகளுக்கு தலா 1.4 லட்சம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1.2 கோடி வழங்கப்படும்.
2025 சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. இந்த தொடரில் இந்திய அணி தனது போட்டிகளை துபாயில் விளையாட இருக்கிறது.
வருகிற 19-ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசம் அணியை எதிர்கொண்டு விளையாடுகிறது. இந்தப் போட்டி வருகிற 20-ம் தேதி நடைபெற இருக்கிறது.