Friday, May 2, 2025
HomeMain NewsTechnologyஎலான் மஸ்க்கின் 97.4 பில்லியன் டாலர் ஆஃபரை நிராகரித்த OPEN AI

எலான் மஸ்க்கின் 97.4 பில்லியன் டாலர் ஆஃபரை நிராகரித்த OPEN AI

கடந்த 2022 ஆம் ஆண்டு பிரபல சமூக ஊடாகமான ட்விட்டரை விலைக்கு வாங்கி அதை எக்ஸ் என பெயர் மாற்றி மஸ்க் நடத்திக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் வளர்ந்து வரும் செயற்கை தொழில்நுட்பத் துறையில் கோலோச்சி வரும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் மீது எலான் மஸ்கின் கண்கள் விழுந்துள்ளது. சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ சேவைகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.

இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக சாம் ஆல்ட்மேன் உள்ளார். 2015 இல் ஓபன் ஏஐ நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் எலான் மஸ்க்கும் ஒருவர்.

ஆனால் 2018 கருத்து வேறுபாடு காரணமான அதிலிருந்து வெளியேறினார். இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பின் எலான் மஸ்க் மற்றும் அவரது முதலீட்டாளர் குழுவினர், ஓபன் ஏஐ நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஓபன்ஏஐ நிறுவனத்தை 97.4 பில்லியன் டாலர் கொடுத்த வாங்க எலான் மஸ்க் மற்றும் அவரது முதலீட்டாளர் குழு அந்நிறுவனத்திடம் ப்ரொபோஸ் செய்தது.

இந்நிலையில், எலான் மஸ்க்கின் ப்ரொபசலை ஓபன்ஏஐ நிறுவனம் நிராகரித்துள்ளது. OpenAI விற்பனைக்கு இல்லை என்று அந்நிறுவனத்தின் தலைவர் பிரட் டெய்லர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே எலான் மஸ்க்கின் கோரிக்கை தொடர்பாக ஓபன்ஏஐ சி.இ.ஓ. சாம் ஆல்ட்மேன் தனது எக்ஸ் பக்கத்தில், “வேண்டாம்.. நன்றி.. வேண்டுமானால் எக்ஸ் தளத்தை 9.74 பில்லியன் டாலருக்கு நாங்கள் வாங்க தயாராக இருக்கிறோம்” என்று கிண்டலாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments