இலங்கை உட்பட பூமத்திய ரேகைப் பகுதியில் அமைந்துள்ள பல நாடுகளில் தற்போதைய நாட்களில் அதிக வெப்பநிலை பதிவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கு முதலாவது பருவமழை மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கிடைக்கப்பெறும்.
வடகிழக்கு பருவமழை காலத்துக்கு முந்தைய நிலையில் பெப்ரவரி மாதம் உள்ளது.
இந்த காலப்பகுதியில் காலையில் சூரிய ஒளி பூமியைத் தீவிரமாகத் தாக்குவதுடன், தற்போதைய நாட்களில் காற்றின் ஈரப்பதனில் குறிப்பிடத்தக்க அளவு குறைவையும் அவதானிக்கலாம்
எனவே, வளிமண்டலத்தில் நீராவி சேர்க்கப்பட்டாலும், மேகங்கள் உருவாகும் போக்கு குறைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அதுல கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
எனவே, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையில் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 36 பாகை செல்சியஸ் வரை பதிவாகக்கூடும்.
பிரதானமாக கொழும்பு, காலி, இரத்தினபுரி, திருகோணமலை, மட்டக்களப்பு, மன்னார், அனுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நேற்றைய தினம் அதிகளவாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அதற்கமைய நேற்றைய தினம் அதிகபட்ச வெப்பநிலை இரத்தினபுரியில் பதிவாகியிருந்த நிலையில் அங்கு 36.7 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது.