மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் மகளிர் அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத்தீர்மானித்தது.
அதற்கமைய, முதலில் துடுப்பாடிய மும்மை இந்தியன்ஸ் மகளிர் அணி 19.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றது.
இந்தநிலையில், 165 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி கெப்பிட்டல்ஸ் மகளிர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்த நிலையில், வெற்றி இலக்கை அடைந்தது.