இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மட்டக்களப்பில் தற்போது நடைபெற்று வருகின்றது.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் காரியாலயத்தில் இக் கூட்டம் நடைபெற்று வருகின்றது.
இந்த செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் பதில் தலைவர், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.