உக்ரைனுக்கு பிரித்தானிய ராணுவத்தை அனுப்ப தயார் நிலையில் இருப்பதாக பிரதமர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஐரோப்பாவின் பாதுகாப்பைப் பேணவும் பிரித்தானியா ராணுவத்தினரை அனுப்ப தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
“உக்ரைனின் பாதுகாப்பு என்பது ஐரோப்பா மற்றும் பிரித்தானியாவின் பாதுகாப்பும் தான்” என ஸ்டார்மர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனின் அமைதி குறித்து பாரிஸில் பிப்ரவரி 19 அன்று ஐரோப்பிய தலைவர்களுடனான சந்திப்பில் கலந்துகொள்ள உள்ளார்.
இதனிடையே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புடன் நாளையிலிருந்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
100 ஆண்டு பாதுகாப்பு ஒப்பந்தம்
பிரித்தானியா-உக்ரைன் இடையே 100 ஆண்டு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அதன்படி, உக்ரைனில் பிரித்தானிய ராணுவத்திற்கான தளங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஒப்பந்தத்தின் கீழ், உக்ரைனுக்கு 2025 முதல் ஆண்டுக்கு £3 பில்லியன் நிதி உதவி (2030-31 வரையில்) வழங்க பிரித்தானிய அரசு உறுதியளித்துள்ளது.
அதுமட்டுமின்றி, புதிய Gravehawk வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் இந்த முடிவு, உக்ரைனுக்காக உறுதியாக நிற்கும் முயற்சியாகவும், ஐரோப்பிய பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.