8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் வருகிற 19-ந்தேதி (நாளைமறுதினம்) பாகிஸ்தான் மற்றும் துபாயில் தொடங்குகிறது.
இந்தியா மோதும் போட்டிகளில் மட்டும் துபாயில் நடைபெறும். மற்ற போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறுகிறது.
8 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் “ஏ” பிரிவில் இடம் பிடித்துள்ளன.
தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகளும் “பி” பிரிவில் இடம் பிடித்துள்ளனர்.
ஆஸ்திரேலியா தனது முதல் போட்டியில் இங்கிலாந்தை வருகிற 22-ந்தேதி எதிர்கொள்கிறது
இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா அணி இன்று பாகிஸ்தான் சென்றடைந்துள்ளது. இரணடு குழுக்களாக ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தான் சென்றடைந்துள்ளது.
இலங்கைக்கு எதிரான தொடரை முடித்துக் கொண்டு கேப்டன் ஸ்மித் பயிற்சியாளர்கள், உதவி பயற்சியாளர்கள் கொழும்பில் இருந்து துபாய் வழியாக முதற்கட்டமாக பாகிஸ்தான் சென்றடைந்துள்ளனர்.
15 பேர் கொண்ட மற்றொரு குழு ஆஸ்திரேலியாவில் இருந்து துபாய் வழியாக பாகிஸ்தான் சென்றடைந்துள்ளனர். இதில் கூடுதலாக இரண்டு துணை பயிற்சியாளர்கள் (support staff) அடங்குவர்.
ஆஸ்திரேலியா தனது முதல் போட்டியில் வருகிற 22-ந்தேதிதான் விளையாட இருக்கிறது. இடையில் 4 நாட்கள் உள்ள போதிலும் பயிற்சி ஆட்டம் எதிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா அணி கடந்த வாரம்தான் இலங்கை அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியிருந்தது. இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா தோல்வியடைந்திருந்தது.
22-ந்தேதி தென்ஆப்பிரிக்காவையும் (ராவல்பிண்டி), ஆப்கானிஸ்தானை 228-ந்தேதியும் (கடாபி) எதிர்கொள்கிறது. ஒவ்வாரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறும்.
ஆஸ்திரேலியா அணி விவரம்:-
ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சீன் அபோட், அலெக்ஸ் கேரி, பென் துவார்சுயிஸ், நாதன் எல்லிஸ், ஜேக் பிராசர்-மெக்கர்க், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஷ், ஸ்பென்சர் ஜான்சன், மார்னஸ் லபவுசேன், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மேத்யூ ஷார்ட், ஆடம் ஜம்பா