நிலவும் மிகவும் வறட்சியான வானிலை காரணமாக, நீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.
நீர் நிலைகளின் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருவதாகவும், வெப்பம் காரணமாக மக்களின் நீர் நுகர்வு மிக அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், நிலவும் வறட்சியான வானிலை காரணமாகப் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்க தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நேரத்தில் குடிநீரை முடிந்தவரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.