பாடசாலை மாணவிகளைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்குள்ளான முல்லைத்தீவு மல்லாவி காவல்துறை நிலையத்தின் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இன்றையதினம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக மல்லாவி காவல்துறை தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு மல்லாவி காவல்துறை நிலையத்தின் கான்ஸ்டபிள் ஒருவர் மீது யோகபுரம் பகுதியில் உள்ள பாடசாலையில் வைத்து மாணவர்களின் பெற்றோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மதுபோதையுடன் பாடசாலையின் மலசலக்கூடத்திற்குச் சென்ற அவர் 3 மாணவிகளைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்தாக கூறியே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குறித்த மாணவிகள் பெற்றோருக்கு அறியப்படுத்தியதை அடுத்து அவர் மீது பழைய மாணவர்களும் பெற்றோரும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் மல்லாவி காவல்துறைக்கு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர், சம்பவத்துடன் தொடர்புடையவரைக் கைது செய்தனர்.