கனேமுல்ல சஞ்சீவவை நீதிமன்ற வளாகத்தில் வைத்து சுட்டுக்கொன்றதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி, நீதிமன்றத்திற்குள் நுழைந்த போது பதிவான சி.சி.டி.வி வீடியோ வௌியாகியுள்ளது.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் இன்று (19) காலை ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ மீது நபரொருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இதில் படுகாயடைந்த கணேமுல்ல சஞ்சீவ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார்.
சட்டத்தரணிப் போல் வேடமணிந்த ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Video Player
00:00
00:00