Tuesday, February 3, 2026
HomeCinemaOfficer On Duty திரை விமர்சனம் | Officer On Duty Movie Review

Officer On Duty திரை விமர்சனம் | Officer On Duty Movie Review

Officer On Duty திரை விமர்சனம் | Officer On Duty Movie Review

குஞ்சாகோ போபன், பிரியாமணி நடிப்பில் வெளியாகியுள்ள “ஆஃபிஸர் ஆன் டியூட்டி” மலையாளப் படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.

குஞ்சாகோ போபன் CI அதிகாரியாக மீண்டும் பணியில் சேருகிறார். அவர் காவல் நிலையத்தில் நுழைந்த முதல் நாளே நகை திருட்டு வழக்கு ஒன்று வருகிறது.

அதனை அவர் விசாரிக்க தொடங்கும்போது ஜெகதீஷின் மகள், தனது அப்பாவுக்கு தெரியாமல் போலி நகையை அவரிடம் கொடுத்ததை குஞ்சாகோ போபன் அறிகிறார்.

அதன் பின்னர் அசல் நகை குறித்து தெரிந்து அடகு கடையில் சோதிக்கும்போது, ஜெகதீஷின் மகள் அடகு வைத்த நகையுடன் மேலும் இரண்டு நகைகள் வைக்கப்பட்டிருந்தது தெரிய வருகிறது. இந்த விசாரணை நடக்கையில் ஜெகதீஷின் மகள் தனது பாய் பிரண்ட் குறித்து தெரிந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்கிறார்.

அவரின் மரணம் குஞ்சாகோ போபனுக்கு தனது மகளின் இறப்பை நினைவுப்படுத்த தடுமாறுகிறார். எனினும் அப்பெண்ணின் இறப்பிற்கு பின்னால் யார் இருக்கிறார் என விசாரிக்கும்போது அதிர்ச்சி உண்மைகள் தெரிய வருகிறது.

தனது மகளின் இறப்பிற்கும், ஜெகதீஷின் மகளின் மரணத்திற்கும் உள்ள ஒற்றுமையை வைத்து, குற்றவாளி யார் என்பதை எப்படி குஞ்சாகோ போபன் கண்டுபிடித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

மலையாள படங்களுக்கே உரித்தான க்ரைம் த்ரில்லர் கதையாக வெளியாகியுள்ளது இந்த ஆஃபிஸர் திரைப்படம். தமிழில் வெளியான வேட்டையாடு விளையாடு, நான் மகான் அல்ல படங்களை பெரிதும் இந்த கதை நினைவுப்படுத்துகிறது.

எனினும், ஆரம்பம் முதல் இறுதிவரை சீட் எட்ஜ் நுனியில் உட்கார வைக்கிறார் இயக்குநர் ஜித்து அஷரெஃப். இடைவேளை காட்சியில் வரும் ட்விஸ்ட் துப்பாக்கி படத்தின் முக்கிய காட்சியை நினைவுபடுத்துகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular