Saturday, May 24, 2025
HomeMain NewsSri Lanka17 மீனவர்கள் கடற்படையினரால் கைது

17 மீனவர்கள் கடற்படையினரால் கைது

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 17 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெப்ரவரி 13 முதல் 19 வரை நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இவர்கள் கொக்கடி, நந்திக்கடல், முல்லைத்தீவு, ஆனவாசல், சின்னபாடு மற்றும் கடைக்காடு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும், 18 முதல் 58 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் கடற்படை தெரிவித்துள்ளது.

இதனுடன், 12 மீன்பிடி படகுகள், ஒரு மோட்டார் சைக்கிள், 156 சட்டவிரோத மீன்பிடி வலைகள், 184 கடலட்டைகள் மற்றும் 22 சங்கு ஓடுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகம், புத்தளம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை உதவி அலுவலகம், மீன்பிடித்துறை அலுவலகம், மூதூர் கடற்றொழில் பரிசோதகர் மற்றும் யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments