சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் அறிமுக போட்டியில் சதமடித்த நான்காவது இந்திய வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார்.
பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் அவர் குறித்த மைல்கல்லை எட்டினார்.
முன்னதாக இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர், சிகர் தவான், மொஹமட் கைஃப் ஆகியோர் அறிமுக போட்டியில் சதம் விளாசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.