கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் , மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 14 ஆம் திகதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.
வைத்திய பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒருவாரம் கடந்த நிலையில், தற்போதுவரை அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.