தமிழில் 2011ல் வெளியான சீடன் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியவர் நடிகர் உன்னி முகுந்தன். இப்படத்தில் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். இப்படத்தினை தொடர்ந்து மலையாள சினிமாவில் காலெடி எடுத்து வைத்த உன்னி முகுந்தன, டாப் நடிகராக வலம் வந்தார்.
கடந்த ஆண்டு பல கோடி பட்ஜெட்டில் உருவாகி வெளியான மார்கோ படத்தில் நடித்தும் படத்தை தயாரித்தும் இருந்தார் உன்னி முகுந்தன். இப்படம் வெளியாகி 100 கோடிக்கும் மேல் வசூலித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இந்நிலையில் திரையரங்கிற்கு வந்த உன்னி முகுந்தனை ரசிகர் ஒருவர் நெருக்கமாக வந்து வீடியோ எடுத்துள்ளார். இதனை கவனித்த உன்னி முகுந்தன், ரசிகரின் போனை பிடிங்கி தன்னுடைய சட்டை பாக்கெட்டில் போட்டு முறைத்துவிட்டு சென்றுள்ளார்.
அவரின் இந்த செயல் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
https://x.com/PrakashMahadev/status/1893328286031249450