இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் தாங்கள் கைது செய்யப்படுகின்றமைக்கு எதிராக ஏலவே அவர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.
அவர்களின் பணிப்புறக்கணிப்பு இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.
இந்தநிலையில் நாளை மறுதினம் முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அவர்கள் தீர்மானித்துள்ள தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் இடம்பெற்ற கடற்றொழிலாளர்கள் ஆலோசனைக் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.